800 பேருக்கு ஒரே பிறந்த தேதி

ஆதார் அட்டையில், பொதுமக்களின் விவரங்களை பதிவு செய்ததில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது கொண்டிருக்கிறது.  புகைப்படத்திற்கு பதிலாக  நடிகைகள் படம் செருப்பு பிள்ளையார் என பல படங்கள் இருந்த குளருபடி நாடரிந்தது.

ஆதார் அட்டையை, முக்கிய சேவைகளுக்குக் கட்டாயமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. வெறும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் ரேஷனில் அரிசி, கோதுமை வழங்கப்படாமல் உயிரிழப்புகள் வேறு.

நிலைமை இப்படி இருக்க, உத்ராகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த கெய்ந்தி கடா கிராமத்தில் வாழும் 800 பேருக்கும் ஒரே பிறந்த தேதியை பதிவு செய்து அசத்தியுள்ளனர் அதிகாரிகள்.

அதாவது, பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு, ஜனவரி ஒன்று என்பதை பிறந்த தேதியாக பதிவு செய்யும் வகையில் ஆதார் அட்டையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால், ஒரு கிராமத்தில் வாழும் 800 பேருக்குமே பிறந்த தேதி தெரியாதா? தெரிந்தவர்களுக்கும் அப்படியே வழங்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி எண் என்று சொன்னார்கள். ஆனால் இங்கு எல்லோருக்குமே ஒரே பிறந்த தேதியாக இருக்கிறதே? என்று கேட்கிறார் கிராம மக்களில் ஒருவர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. The having a card of this kind has some drawbacks. It is not universal for many actions. However, we can use it http://essay-editor.net/blog/category/services/page/5 for our own purposes.

Your email address will not be published.

Scroll To Top