தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தத்தை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: உ.பி அரசு மேல்முறையீடு

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

சுப்ரீம் கோர்டு இரு நீதிபதிகள் பெஞ்சுக்கு நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தாஜ்மஹாலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் வாகன நிறுத்தங்களை அகற்றவேண்டும் என ஆக்ரா நகர நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

கலாச்சார சின்னமான தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் எனவும், நான்கு வாரங்களுக்குள் வாகன நிறுத்தங்கள் அகற்றப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

 

இந்நிலையில், இரு நீதிபதிகள் அமர்வின் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. The decision of the court regarding this memo is quite legitimate and correct. The order of the local authorities had some influence on this.
    http://edit-it.org/blog/how-to-rewrite-an-essay-with-no-plagiarism

Your email address will not be published.

Scroll To Top