மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஆகியவையே நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி குறைவிற்கு காரணம்
நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி தற்போது 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான் என கூறப்படுகிறது. . இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வந்தன.
பா.ஜ.கவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரு படி மேலே சென்று, ஜி.டி.பி கணக்கிடும் முறையை மாற்றியதால் தான் 5.7 சதவிகிதம் ஜி.டி.பி உள்ளது, பழைய முறையில் கணக்கிட்டால் வெறும் 3.7 தான் என பரபரப்பு கருத்து தெரிவித்தார். ஜி.டி.பி சரிவை சரிகட்டும் விதமாக மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசின் ப்ரெஸ் இன்பர்மேஷன் பீரோ தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 3 ஆண்டுகளில் உண்மையான ஜி.டி.பி 7.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை குறிப்பிட்டு, “மிஸ்டர். ஜெட்லி கேலிக்கூத்துக்கள் உங்களுடனே இருக்கட்டும்” என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.