அரசுக்கு வெட்கமாக இல்லையா? விஜயகாந்தி கேள்வி

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த கூடுதல் தொகையை கடந்த 4 ஆண்டுகளாக வழங்காத கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்தும், விவசாயிகளின் நலன் காக்க இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:-

தமிழகம் தற்போது லஞ்சம், ஊழலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து டெங்கு காய்ச்சலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் டெங்குவிற்கு யாரும் இறக்கவில்லை என்கிறார்கள். 40 பேர் இறந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை சொல்கிறது.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சுமூகமான உறவு இல்லை.

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் 3 பேர் இறந்துள்ளனர். கந்து வட்டியை கூட ஒழிக்க இந்த அரசால் முடியவில்லை. கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து காவல்துறையினர் பணத்தை வாங்கிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இது வெட்கமாக இல்லையா? இதே முடிவு கரும்பு விவசாயிகளுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த நிலைமைக்கு கரும்பு விவசாயிகள் வர இந்த விஜயகாந்த் விடமாட்டான். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று பொருத்திருந்து பாருங்கள். விரைவில் அறிவிப்பேன்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்று ஒரு விழாவை கொண்டாடி மாவட்டந்தோறும் 20 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். அள்ளி, அள்ளி பொய் சொல்கிற மாதிரி, அள்ளி, அள்ளி பணத்தை செலவு செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அவர்களது கட்சிக்காரர்களையே கண்டுகொள்வதில்லை. 4 ஆண்டு காலம் ஆட்சி தொடர வேண்டும். தாங்கள் வருமானம் தேடிக்கொள்ள மட்டுமே இருவரும் ஆட்சி நடத்துகின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விரைவில் தே.மு. தி.க.விற்கு வருவார்கள்.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இரட்டை இலை சின்னத்தை முடக்கியவரே ஓ.பன்னீர்செல்வம்தான். சிவாஜிகணேசன், கமல்ஹாசனை விட எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரமாதமாக நடிக்கிறார்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top