திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க அவசியமில்லை : உச்ச நீதிமன்றம்

ஷியாம் நாராயண் சோக்சி என்பவர் கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், திரையரங்குகளில் படம் திரையிடப்படும் முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் பொழுது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய கீதம் தொடர்பான உத்தரவை மறு பரிசீலனை செய்ய தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும், ‘‘தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒருவர் எழுந்து நிற்கவில்லை என்றால் அவருக்கு தேசபக்தி குறைவு என்று அர்த்தம் இல்லை.

தேசிய கீதம் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள் ஜனவரி 9-ம் தேதிக்குள் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மக்களை தேசப்பற்றை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top