ஈரோட்டில் தமிழிசையை கண்டித்து சாலை மறியல்: விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை அரசியல் நாகரீகமற்ற கருத்து தெரிவித்ததாக கூறி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியல் நடந்தது. கிழக்கு மாவட்ட பொருளாளர் ஈரோடு அரசாங்கம் தலைமை தாங்கினார்.

பகுதி செயலாளர் மதிவாணன், அரங்கநாதன், மூர்த்தி, ரஞ்சித், பால்ராஜ் உள்பட 15 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top