பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேசுவரம் பாம்பனில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் பாம்பன் தேவசகாயம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மாரியப்பன், மேஸ்டன், ரீகன் உள்பட 4 பேரை சிறைபிடித்துச் சென்றனர்.

அவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top