புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை எதிர்க்காவிட்டால் தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லை

ஈழ தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது உரிமையை முற்றுமுழுதாக பறிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை என தமிழக மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியிலுள்ள அம்பன்பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான பொருட்களை வழங்கி உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்  பேசும்போது

எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்குள் எமது தலைவிதியை முற்று முழுதாகத் தீர்மானிக்கும் வகையில் எம்மை ஏமாற்றி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

.போரினால் தமிழ் மக்களின் அரசியல் தோற்கவில்லை எனவும் தற்போது தான் தோற்றிருப்பதாகவும் தெரிவித்த அவர் எப்போது  தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நாங்கள் கைவிடுகின்றோமோ அப்போது தான் தமிழர்கள் தோற்றுவிட்ட இனமாக மாறுவோம். எனவும் சுட்டிக்காட்டினார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top