உலகின் மைய சக்தியாக விளங்கும் சீனா -அதிபர் ஜி ஜின்பிங்

சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் 3.5 மணி நேரம் உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி, ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அவரது பேச்சின் ஓவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டு உள்ளனர்.

வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும். அதே நேரம், உலகத்துடனான தமது கதவுகளை சீனா மூடிக்கொள்ளாது.

இந்தப் புது யுகத்தில் உலகின் மைய இடத்தை சீனா எடுக்கும், புதிய சகாப்தத்தில் சீனா நுழைந்துள்ளது என கூறினார்.

ஷின்ஜியாங், திபெத், ஹாங்காங் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ள இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்ற அரசின் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top