இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். தற்போது காங்கேசம் துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு – மன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் படகில் ஏறிய இலங்கை கடற்படையினர், மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி, 2 படகையும் அதில் உள்ள 8 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர்.
தற்போது சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 8 மீனவர்களையும் காங்கேசம் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.  அவர்கள் மீது எல்லைதாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து, பிற்பகலுக்குமேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top