மோடி-ராஜ் நாத் சிங் மீது புகார் கூறிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது

கவுகாத்தி

காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் கடும் குளிர் நிறைந்த பனி பிரதேசத்தில் பணியாற்றும் தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் இந்தாண்டு தொடக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் வீரர்களுக்கு காய்ந்த சப்பாத்தியும், வாயில் வைக்க முடியாத பருப்பும் குழம்பும் என வாட்டி வதைக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. அத்துடன் மத்திய அரசு வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான அசாமில் ஜோர்கட் என்ற மத்திய ரிசர்வ் படை முகாமில் பணியாற்றி வரும் பங்கஜ் மித்ரா என்ற வீரர் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த வீடியோவில் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.

இந்த சூழலில் பங்கஜ் மித்ரா மீண்டும் ஒரு வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சரியாக உணவு கூட கொடுக்காமல் உயர் அதிகாரிகள் ஓய்வின்றி வேலை வாங்கி வாட்டி வதைக்கின்றனர்.

வீரர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரமும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய ரிசர்வ் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டை தொடர்ந்து ஏற்கனவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

துணை ராணுவ படையில் வீரர்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசுக்கு தர்மசங்கடமான சூழல் எழுந்துள்ளது.

மேக் இன் இந்தியா என்று பேசி வரும் மத்திய அரசின் உள்நாட்டு தயாரிப்பு, ராணுவ கருவிகள் மற்றும் தொழிநுட்பங்களை உள்நாட்டில் தயாரிக்க வேண்டும் என்று குறி வரும் மத்திய அரசு, ராணுவ வீரர்களுக்கு சரியான உணவு கூட அளிக்கப்படுவது இல்லை என்ற செய்தி நாடு முழுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்தியர் ரிசர்வ் போலீசார் பங்கஜ் மிஸ்ராவை கைது செய்து உள்ளனர். இது குறித்து ஜோர்கட் போலீஸ் சூப்பிரெண்டு பி.கே. பயுயான் கூறியதாவது:-

ரவுரியா மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் கமாண்டர் பெக்ரா கொடுத்த புகாரின் பேரில் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீது பல் வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மிஸ்ரா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top