கர்நாடகத்திற்கு தனிக்கொடி அவசியம்: சித்தராமையா பேச்சு

பெங்களூரு:

கர்நாடக ரட்சன வேதிகே அமைப்பின் சார்பில் மாநாடு பெங்களூருவில் நடந்தது. இந்த மாநாட்டில் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா பேசியதாவது:-

நான் ஒரு கன்னடன். கன்னட மொழிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். கன்னட கவிஞர் குவெம்பூ கூறியது போல நீ எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் கன்னடனாக இரு என்று அவர் சொன்னதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

கடந்த 65 ஆண்டுகளாக கன்னட கொடி வேண்டும் என்ற பேச்சு வார்த்தைகள் நடந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக காங்கிரஸ் அரசு கன்னட கொடி அமைப்பு குழுவை உருவாக்கி உள்ளது. கர்நாடகத்தில் கன்னட கொடி இருப்பது அவசியமானதாகும். இதற்காக தேசிய கொடியை நாங்கள் அவமதிக்க வில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top