ரோஹிங்யா இன முஸ்லிம்கள் குறித்து அடுத்த மாதம் 21-ந் தேதி விரிவான விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி,

மியான்மார் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்யா இன முஸ்லிம்கள், உயிருக்கு பயந்து பக்கத்தில் உள்ள பல நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். தற்போதுவரை மியான்மரில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர், இன்னும் அங்கு ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்திய அரசு ரோஹிங்யா இன முஸ்லிம்களை மயன்மாருக்கு திரும்பி செல்லுமாறும் அல்லாது நாடுகடத்த படுவோர் என்று கூறியது. உயிருக்கு பயந்து அகதிகளாக தஞ்சம் அடைந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களை மத்திய அரசு நாடுகடத்த முடிவு செய்தது. அகதிகள் நாடு திரும்ப அஞ்சுகின்றனர். எனினும் இந்தியாவின் பாதுகாப்பு கருதி என்று குறிக்கொண்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவை இல்லை என்பதால் விசாரணை அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த பிரச்சினையில் தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள், தொழிலாளர் நலன், குழந்தைகள், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனிக்கவேண்டி உள்ளது. அதேநேரம் இதில் அவசர நிலை ஏதாவது ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டை உடனே அணுகலாம்” என்றனர்.

மேலும், அடுத்த விசாரணை நடைபெறும்வரை ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்தவேண்டாம் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top