இந்தியாவில் பசி, பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு: உலக அளவில் பின் தங்கியுள்ளது

புதுடெல்லி,

உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினி அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் உள்ள 119 நாடுகளில் இந்தியா 100 வது இடம் பெற்றும் பின்னடவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97-வது இடம் வகித்தது. வடகொரியா, வங்காளதேசம், ஈராக் ஆகிய நாடுகள் இந்தியாவை விட இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவையும் விட பின் தங்கியுள்ளது.

சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் எடை குறைவாகவும், இரத்த சோகையுடனும் காணப்படுகின்றனர். கடந்த சில வருடங்களாக நாட்டில் குழந்தைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை.

பொது விநியோக முறைமை மூலம் ஊட்டச்சத்து தொடர்பான தலையீடுகள் மற்றும் திட்டங்கள் ஆண்டுகளாக தொடங்கப்பட்ட இடம் பெற்று இருந்தன. இந்த நிலையிலும் ஊட்டச்சத்து குறைபாட்டை இந்தியா அரசால் சரியான முறையில் அணுகி தீர்க்கப்படவில்லை. மக்களுக்கான பொது விநியோக முறைமையில் பல மானியங்கள் நிறுத்தப்பட்டு விட்டது அரசின் இந்த மறைமுக செயல் ரேஷன் கடைகளை மூடப்போவதாகவே உள்ளது. இது ஒட்டு மொத இந்தியா மக்களை பாதிக்க கூடியதாக உள்ளது இது மேலும் ஊட்டச்சத்து குறைபட்டு நிலைக்கு வழிவகுக்கும்.

பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (106) ஆப்கானிஸ்தான் (107), வடகொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top