கேளிக்கை வரி குறைப்பு, தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: விஷால் பேட்டி

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு அணைத்து மாநிலங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஜி.எஸ்.டிக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வித பிரச்னையும் இன்றி இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

சினிமா டிக்கெட்டுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

ஏற்கனவே சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்படுகிறது. உள்ளாட்சி கேளிக்கை வரியையும் செலுத்தினால் தியேட்டர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே உள்ளாட்சி கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கூடுதல் கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை பட அதிபர்கள் சங்கம் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் அரசுடன் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது,

* நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட பொதுமக்கள் அதிகமாக கொடுக்கத் தேவையில்லை.

* திரையரங்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்

* திரையரங்குகள் அரசு சார்பில் கண்காணிக்கப்படும்

* அனைத்து கட்டணங்களும் விதிமுறைக்கு உட்பட்டே இருக்கும்.

* கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு

* திரையரங்குகளில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. குறைந்தபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே விற்க வேண்டும்.

* தீபாவளிக்கு இரு படங்கள் மட்டுமே ரிலீஸ். விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. அதுதவிர்த்து மேயாத மான், சென்னையில் ஒரு நாள்-2, கொடிவீரன், அறம் உள்ளிட்ட படங்களில் ஒரு படம் மட்டுமே ரிலீசாக இருக்கிறது.

இவ்வாறு விஷால் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top