10 அமைச்சர்கள் 40 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுக்கு ஆதரவு

சென்னையில் 5 நாள் பரோலில் தங்கியிருந்த சசிகலா நேற்று பரோல் காலம் முடிந்ததால் கார் மூலம் பெங்களூர் சிறைக்கு சென்று விட்டார்.

அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வழிநெடுக நின்று வரவேற்றனர்.

சசிகலா தி.நகரில் 5 நாள் தங்கி இருந்தபோது அவரை வீட்டுக்கு சென்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்று சந்தித்து வந்தனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் யாரும் சசிகலா வீட்டு பக்கம் வரவில்லை.

போலீஸ் கண்காணிப்பு அதிகம் போடப்பட்டிருந்ததால் இவர்கள் அங்கு வர வில்லை என்று தொண்டர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் சசிகலாவை நேரில் சென்று சந்திக்க முடியாத சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொலைபேசியில் சசிகலாவுடன் பேசியதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இதுபற்றி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்த போது  கூறியதாவது.

சசிகலாவை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்ததை பார்க்கும் போது கட்சி இன்னும் சசிகலா பக்கம்தான் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இதை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், மாவட்டச் செயலாளர்களும் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

சசிகலா மூலம் எம்.எல்.ஏ. ‘சீட்’ வாங்கியவர்கள் அமைச்சர் பதவிக்கு வந்தவர்கள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்த தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

எனக்கு கிடைத்த தகவல் படி 10 அமைச்சர்கள், 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுடன் பேசி இருக்கலாம்.

எடப்பாடி பழனிசாமி அரசு சிறைத்துறை மூலம் சசிகலாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதனால்தான் 15 நாள் கிடைக்க வேண்டிய பரோலை 5 நாளாக குறைத்து விட்டனர்.

இருந்தாலும் தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top