தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி வளர்மதி கோரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டரிக்கை கொடுத்த காரணத்திற்காகக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி பல்கலைக்கழகம் தன்னைத்  தேர்வு எழுத அனுமதிக்க  வேண்டும் என்று கோரிக்கை  வைத்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்  முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்   மாணவி வளர்மதியை  கடந்த ஜூலை மாதம்   ஹைட்ரோகர்பன் திட்டத்திற்கு எதிராக துண்டரிக்கை கொடுத்த காரணத்திற்காக கைது செய்த தமிழக காவல் துறை அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியது. 5.8.2017 இந்தக் குண்டர் சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கிய நிலையில் தனது கல்வியைத் தொடர தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதிக்க மறுக்கிறது,  தன்னைத் தேர்வு  எழுத அனுமதிக்க வேண்டும் என்று இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வளர்மதி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று(அக்டோபர் 12) நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வளர்மதி பேசிய பொழுது. நான் கைது செய்யப்பட்ட போது பல்கலைக்கழக விதிப்படி மாணவர்களால் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் வரும் சூழலில் அந்த மாணவரை  இடை நீக்கம் செய்யலாம் என்ற விதியின் அடிப்படையில் இடைநீக்கம் செய்தார்கள்.  என் மீது கைது நடவடிக்கை எடுத்தது காவல் துறை செய்த தவறு  என்று தீர்ப்பு வந்த பின் என்னைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால்  உடனடியாக  சேர்த்து கொள்ளாமல் இழுத்தடித்துத் தான் சேர்த்தார்கள்.

தற்பொழுது தேர்வு கட்டணம் செலுத்த சென்ற பொழுது வருகை பதிவு குறைவாக இருப்பதால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்கிறார்கள். நான் விடுப்பு எடுத்ததுதான் என் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்து தமிழக அரசுதான் அவர்கள் செய்த தவற்றுக்கு நான் இரண்டு மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்து இருக்கிறேன் இப்பொழுது தேர்வு எழுத அனுமதிக்க மறுப்பதால் மேலும் எனக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. ஏற்கனவே  இரஞ்சித் என்பவரது வழக்கில் மாணவர்  இடை நீக்கம் செய்யப்பட்ட காலகட்டத்தைக் கணக்கில் எடுக்காமல் கல்லுரிக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில்  வருகை பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டுதான் கணக்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.   இதன் அடிப்படையில் என்னை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.

மேலும் இது போன்ற சிக்கல்கள்  வருவதற்கு அடைப்படை காரணம் பலகலைக்கழகங்களில்   மாணவர் தேர்தல் நடத்தாததுதான் காரணம். மாணவர்களுக்கு எதிரான விதிகளை மிகச் சரியாக  கடைப்பிடிக்கும் பலகலைக்கழக நிர்வாகங்கள். மாணவர்களுக்கு ஆதரவான  எந்த விதிகளையும் கடைப்பிடிப்பது இல்லை. பல்கலைக்கழகங்களில் மாணவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு.  தமிழகத்தில் எந்த பல்கலைக்கழகமும் இதனை கடைப்பிடிக்கவில்லை என்றார்.   தமிழகத்தில் உள்ள பல் வேறு மாணவர் இயக்கங்கள் வளர்மதிக்கு ஆதரவாக இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.  அவர்கள் வளர்மதியைத்  தேர்வு எழுத அனுமதிக்க வில்லை என்றால்  தமிழகம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்  கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, மாணவர் இந்தியா, தமிழ்நாடு அனைத்து மாணவர் இயக்கம்,  தமிழ் நாடு மாணவர்  முன்னனி மற்றும்   பாலசந்திரன்மாணவர் இயக்கம் .ஆகியோர் கலந்துகொண்டனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top