எங்கள் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறி விட்டது: சீனா குற்றச்சாட்டு

பீஜிங்:

தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பலை நிலை நிறுத்தியுள்ளதின் மூலம் தங்கள் நாட்டு இறையாண்மையை அமெரிக்கா மீறியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்ற நிலையில், அமெரிக்கா தற்போது தெற்கு சீன கடல் பகுதியில் அதன் போர் கப்பலை நிலை நிறுத்தி இருப்பது பெரும் பதற்றத்தை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக, சீன நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நாடுகளுடன் போட்டியிட்டு தெற்கு சீன கடல் பகுதிக்கான போரில் தோல்வியை சந்தித்த சீனா, தெற்கு சீன கடல் பகுதிக்கு இன்னும் ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தெற்கு ஆசியா பிராந்தியத்தில் அதன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top