பரோல் முடிந்து பெங்களூர் சிறைக்கு திருப்புகிறார் சசிகலா

சென்னை:

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள அவருடைய மனைவியும், அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளருமான சசிகலா தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியுள்ளார்.

தினமும் அவர் தனது கணவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார். சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பரோல் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 5 மணிக்குள் அவர் சிறைக்கு வந்துவிட வேண்டும் என்று ஏற்கனவே பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. எனவே 4 மணிக்குள் சிறைக்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது பரோல் முடிந்து வந்ததற்கான உரிய ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்படும். இதைத் தொடர்ந்து சசிகலா மீண்டும் ஜெயிலில் அடைக்கப்படுவார்.

சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஆண்டுகள் தண்டனையில் இதுவரை 8 மாதங்கள் மட்டுமே கழிந்துள்ளது. எனவே இன்னும் 3¼ ஆண்டுகள் சிறை வாசத்தை சசிகலா அனுபவிக்க வேண்டியதுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top