தீபாவளிக்கு புதுபடங்கள் வெளியாகுமா?

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு அணைத்து மாநிலங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஜி.எஸ்.டிக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வித பிரச்னையும் இன்றி இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

தமிழில் வெளியாகும் புதிய படங்களுக்கு அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்தது. பட அதிபர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பால் அது 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையும் திரையுலகினர் கண்டித்துள்ளனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவதாக இருந்த விழித்திரு, உறுதிகொள், கடைசி பெஞ்ச் கார்த்தி, களத்தூர் கிராமம், திட்டிவாசல், உப்பு புளி காரம், அழகின் பொம்மி ஆகிய 7 படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

விஜய் நடித்துள்ள மெர்சல், சசிகுமாரின் கொடி வீரன், பரத் நடித்துள்ள பொட்டு ஆகிய 3 படங்களும் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 18-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களை விட தீபாவளிக்கு அதிக காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்குவது உண்டு. ஒருவாரம் அதிகமான வசூலும் இருக்கும்.

கேளிக்கை வரியை 10 சதவீதத்தில் இருந்து குறைக்க முடியாது என்று அமைச்சர் அறிவித்து இருக்கிறார். பட அதிபர்கள் கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அரசு தரப்பினரும் திரையுலகினரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். சமரச முயற்சியில் இழுபறி நீடிப்பதால் தீபாவளி படங்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top