ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.

நெடுந்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே தமிழக கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கிருந்து செல்லுங்கள் எனக்கூறி விரட்டினர். மேலும் சில படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கினர். மேலும் மீன்பிடி வலைகள், சாதனங்களை தேசப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அவசர, அவசரமாக கரை திரும்பினர்.

அப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தங்கச்சிமடம் சார்லஸ் என்பவரது படகில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் பாண்டி (வயது 35), ரெம்ஜிஸ் (45), ஜார்ஜ் (27), ரோமியோ (30), முருகன் (40) ஆகிய 5 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்கள் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இத்தகுத்தலை கண்டித்து இந்திய அரசு இதுவரை இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top