7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் விவாதிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

 

அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.

 

இதைத்தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நிதி ஒதுக்குதல்  குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top