இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

கவுகாத்தி :

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்த போட்டி தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார்கள்.இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top