நடிகர் ஜெய்யை கைது செய்ய கோர்ட் உத்தரவு

சென்னை,

நடிகர் ஜெய் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை குடிபோதையில் தனது ஆடி காரை ஓட்டிச் சென்று அடையாறு பாலத்தில் மோதினர்.

அளவுக்கு அதிகமாக மதுக்குடித்திருந்த அவர், கட்டுப்பாட்டை இழந்து அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவரில் காரை மோதினார். இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக அவர் உயிர் தப்பினார்.

இதுதொடர்பான வழக்கில் நடிகர் ஜெய் சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று ஆஜராக வேண்டும். ஆனால் நேற்று ஆஜராகாததால் சைதாப்பேட்டை கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஆனால் இன்றும் நடிகர் ஜெய் ஆஜராகவில்லை . அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்த 2 நாட்களுக்குள் நடிகர் ஜெய்யை கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் ஜெய் தொடர்பான வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் மீது மோட்டார் வாகனம் சட்டத்தின் பிரிவு 185 மற்றும் 279 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top