இந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு

புது டெல்லி:

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியதில் ராணுவத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். காலை 6 மணியளவில் இந்தியா – சீனா எல்லையில் விபத்து நேரிட்டு உள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட MI-17 V5 ஹெலிகாப்டர் இராணுவ அதிகாரிகளுடன் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசை நோக்கி சென்றுகொண்டு இருந்ததாக, பாதுகாப்பு பேச்சாளர் சுனீத் நியூட்டன் கூறினார்.

புதிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படையை நவீனமயமாக்க இந்தியா முயற்சித்து வருகிறது ஆனால் கொள்முதல் செயல்முறை மெதுவாக இருந்தது.

இந்தியா அதன் இராணுவ உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. இது சீனாவின் உயர்ந்த சாலை மற்றும் விமான இணைப்புகள் கொண்ட இடைவெளியைக் குறைப்பதற்காக இப்பகுதியில் உள்ளது.

காயம் அடைந்தவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை, விசாரணையில் தெரியவரும் என்று பாதுகாப்பு பேச்சாளர் சுனீத் நியூட்டன் கூறினார்.

.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top