இலக்கியத்துக்கான நோபல் பரிசு : பிரட்டனின் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்:

கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. பரிசுகளை நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்து வருகிறார். இதுவரை மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.

இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தாண்டிற்கான நோபல் பரிசு பிரட்டனை சேர்ந்த எழுத்தாளரான கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டது. ஜப்பானின் நாகசாகியில் பிறந்த அவர் பின்னர் பிரட்டனில் குடியேறினார்.

அவர் ஆங்கிலத்தில் பல்வேறு சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். அவருக்கு 7 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top