கேரளாவில் பா.ஜனதா யாத்திரை- நிராகரித்த மக்கள்

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்ணனூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ‘மக்கள் பாதுகாப்பு யாத்திரை’ என்னும் 15 நாட்கள் நடைபெறும் கண்டன ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். இதற்கிடையே பாரதீய ஜனதா யாத்திரைக்கு கூட்டம் கிடையாது எனவும் கூறப்பட்டது.

மாநில பாரதீய ஜனதா தலைவர் ராஜசேகரன் பேசுகையில், “முக்கியமான ஆலோசனை காரணமாக அமித் ஷாவை டெல்லியில் இருக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அவருடைய பணிகள் முடிந்ததும் அவர் யாத்திரையில் கலந்து கொள்வார்,” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதாவிற்கு கூட்டம் இல்லாத காரணத்தினால் அவர் யாத்திரையை புறக்கணித்தார் என கூறிஉள்ளது.

“காவி கட்சியின் அதித விளம்பர யாத்திரையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பதை இது காட்டுகிறது,” என மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளார் பாலகிருஷ்ணன் கூறிஉள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், “கேரளாவில் மதசார்பின்மை என்பது மிகவும் வலிமையானது, அவரால் (அமித் ஷா) இங்கு, வட இந்தியாவை போன்று பிரச்சனையை எல்லாம் ஏற்படுத்த முடியாது,” என கூறிஉள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் பேரணி நடத்தலாம், அதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது என மற்றொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கூறிஉள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top