2017ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்,

கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவ துறைக்கே நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

பரிசுகளை நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார். இன்று 2017ம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசானது 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக ஜாக்கெஸ் டெபோசே, ரிச்சர்ட் ஹேண்டர்சன், ஜோசிம் ஃபிராங்க் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் ஹேண்டர்சன் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். ஜோசிம் ஃபிராங்க் அமெரிக்காவை சேர்ந்தவர். ஜாக்கெஸ் டெபோசே சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top