இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

புதுடெல்லி :

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (நவம்பர்) மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 24-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் டிசம்பர் 2-ந் தேதியும் தொடங்குகிறது.

இரு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி தரம்சாலாவில் டிசம்பர் 10-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி மொகாலியில் 13-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் 17-ந் தேதியும் நடைபெறுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி கட்டாக்கில் டிசம்பர் 20-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி இந்தூரில் 22-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் 24-ந் தேதியும் நடக்கிறது.

கடந்த ஜூலை மாதத்தில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடியது. இதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top