அசாமில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை : மீட்பு பணி தீவிரம்

1deb539e-0320-4a06-adf5-205aba20241e_S_secvpfஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இன்று அஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஹடிகார்க் சரியாலி என்ற இடத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான்.

அவனது பெயர் அபிருள். இவன் கட்டுமான தொழில் நடக்கும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே இருந்த 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றை கவனிக்காமல் விழுந்து விட்டான். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்குழாய் கிணறு அருகே பள்ளம் தோண்டி வருகிறார்கள். அதே சமயத்தில் சிறுவன் சுவாசிக்க குழாய் வழியே ஆக்சிஜனை செலுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை கூறியதாவது, ”இந்த இடத்தின் உரிமையாளரிடம் நான் பலமுறை ஆழ்துளை கிணற்றை மூடும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் மூடவில்லை” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top