விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம்

விஜய் சேதுபதி தற்போது, `சூப்பர் டீலக்ஸ்’, `96′, `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் `சீதக்காதி’, `சயீ ரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’, `ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் `ஜுங்கா’ படத்தை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாரீஸில் இன்று தொடங்கிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தொடர்ந்து 30 நாட்கள் நடக்க இருக்கிறது.

`இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஏ&பி குரூப்ஸ் கைப்பற்றியிருக்கிறது.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதே நாளில் `ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்புயும் இயக்குநர் கோகுல் தொடங்கி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top