லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

லாஸ்வேகாஸ்,

லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் அளவு திரண்டு இருந்தனர், அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்க நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு தொடங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மக்கள் அலறியடித்து ஓடினர். இதில் இருவர் உயிரிழந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12-க்கும் அதிகமானோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெரும் பதற்றம் நிலவுகிறது. 30 மாடி உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அப்பகுதியை பொதுமக்கள் யாரும் அணுகவேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இசை நிகழ்ச்சி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டான் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அருகில் உள்ள மெக்கரன் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டு உள்ளது. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ள ஓட்டலில் அதிக முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

பாதுகாப்பு அங்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளநிலையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது எனவும் 100 பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வேறு நபர்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகமும் வலுத்து உள்ளது. போலீசார் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். விசாரணையும் தொடங்கியும் நடைபெற்று வருகிறது, சோதனையும் நடக்கிறதாக தெரிவிக்கப்படுகிறது. நகரை நோக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. விமான நிலைய சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top