ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா?: தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே. போஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் சரவணன் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கு பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கைரேகையை பதிவு செய்ததாக கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி யில் அ.தி.மு.க. வேட்பாளர் போஸ் வெற்றி பெற்றிருந்தார். இதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் வருகிற 6-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top