தேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

சென்னை:

சென்னையில் நடந்து வரும் தேசிய ஓபன் தடகள போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கப்பதக்கம் வென்றார்.

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 950 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியின் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனைகள் அர்ச்சனா (11.78 வினாடி) தங்கப்பதக்கமும், சந்திரலேகா (11.92 வினாடி) வெள்ளிப்பதக்கமும், கர்நாடக வீராங்கனை பிரஜ்னா பிரகாஷ் (11.92 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் சதாத் (10.57 வினாடி) தங்கப்பதக்கமும், தமிழக வீரர் இலக்கிய தாசன் (10.57 வினாடி) வெள்ளிப்பதக்கமும், சர்வீசஸ் வீரர் வித்யாசாகர் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top