தமிழகத்தை நசுக்கும் இந்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி

சென்னை:

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “கருப்பன்”.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார் இப்படத்தை பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.

கருப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதியிடம் படம் குறித்து பல கேள்விகள் கேட்டாகப்பட்டது,

அதில் நீட் பிரச்னை மற்றும் பல திட்டங்களால் தமிழகத்தை இந்திய அரசு நசுக்கி வருகிறது, இந்த சூழலில் தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் குறித்து எடுக்கபட்ட படத்தில் நீங்கள் நடித்துள்ளீர்கள், இந்த படத்திற்காக இந்தியா அரசால் உங்களுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டால் நீங்கள் பெற்று கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி கூறியதாவது:

கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டேன், என்னக்கு ஏன் ஊர் ஏன் மக்கள் தான் முக்கியம் நிச்சயமாக அதை செய்யமாட்டேன், தமிழகம் நசுக்க படுகிறதா என்ற கேள்வியே வேண்டாம் நாம் நிச்சயமாக நசுக்க பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ரயில் பயணச்சீட்டில் இருந்து நாம் மொழியை நீக்கியிருக்காங்க, அதுவே வருத்தமாவோம், ரொம்ப கோபமாகவும் இருக்கு. இதுக்கு நாம உணர்ச்சிவசப்படுறோம், ஆனால் உணர்ச்சிவசப்படுவதை குறைச்சிட்டு நாம செய்யல இருங்கனும். நம்ம செயல்ல சீரான முறைல சிந்திச்சி செயல் பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top