விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை: ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். இவர் 2005 ஆண்டு தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானார், அதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும், அவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமாகிய படங்கள் என்றால் ‘பீட்சா’ மற்றும் ‘சேதுபதி’. இரண்டுமே விஜய் சேதுபதியுடன் நடித்த படங்களாகும்

தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி கூறிய ரம்யா நம்பீசன்…

“தமிழில் ‘பீட்சா’ படத்துக்கு முன்பே நான் நடித்து வருகிறேன். என்றாலும் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகுதான் பேசப்பட்டேன். ‘பீட்சா’வுக்கு பிறகு பல படங்களில் நடித்தேன் ஆனால் ‘சேதுபதி’ நடித்த போது தான் என்னைப்பற்றி மீண்டும் பேசினார்கள். விஜய் சேதுபதியுடன் நடித்த இரண்டு படங்களுமே எனக்கு நல்ல பெயர் பெற்றுதந்தன. ‘சேதுபதி’யில் நாங்கள் நடித்த காதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மீண்டும் அவருடன் நடிக்க நான் முயற்சி செய்யவில்லை. என்றாலும், விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கேற்ற கதைகள் வரும் போது, நிச்சயம் அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top