அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளது: வடகொரியா மந்திரி தகவல்

நியூயார்க்:

எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார் என வடகொரியா வெளியுறவு துறை மந்திரி ரி யாங் ஹூ தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது.

இதனால் அமெரிக்கா உலக நாடுகளை வலியுறுத்தி, வடகொரியா மீது பொருளாதார தடையை வித்தக வேண்டும் என்று கூறியது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்து. இது அமெரிக்காவிற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவு துறை மந்திரி ரி யாங் ஹூ நியூயார்க்கில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வடகொரியா மீது போர் தொடுக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். எங்களுக்கு எதிரான போரை முதலில் அமெரிக்காவே அறிவித்தது என்பதை ஒட்டுமொத்த உலக நாடுகளும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

தற்கொலைப்படை தாக்குதல்கள் அப்பாவி அமெரிக்கர்களை பாதித்தால் அதற்கு டொனால்டு டிரம்ப்தான் பொறுப்பு. எங்கள் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போரை அறிவித்துள்ள நிலையில், எதிர் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. வடகொரியாவின் வான் எல்லையில் பறக்கும் அமெரிக்காவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் எங்களுக்கு உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top