நாளை மறுநாள் பேரறிவாளன் பரோல் முடிகிறது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது..

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வேலூர் ஜெயிலில் இருந்து கடந்த மாதம் 24-ந் தேதி இரவு ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கும் பேரறிவாளனை, அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல்வேறு தரப்பினர் சந்தித்து வருகிறார்கள்.

அதன்படி, பரோலில் வெளி வந்த நாளில் இருந்து நேற்று வரை, மொத்தம் 27 நாட்களில் 1,657 பேர் பேரறிவாளனை சந்தித்துள்ளனர். பரோல் காலம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது.

பேரறிவாளன் விடுதலையில் நாம் எதிர்பார்க்கிற விஷயம் வேறு. .எம்ஜியாரின் நூற்றாண்டை முன்னிட்டு பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் தமிழகத்தின் உரிமையையான 161ன் கீழ் விடுவிக்க வேண்டும் என்பது தான் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பாக கூட மே 17 இயக்கம் சார்பாக எழுவர் விடுதலைக்கான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் ராஜிவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக தகவல்களை உச்சநீதிமன்றம் கேட்கிறது. அந்த தகவல் பேரறிவாளனை நிரபராதி என்று நிரூபிக்கக் கூடியதாக இருக்கும் என்பதே உண்மை. உச்சநீதிமன்றம் அந்த வழக்கை திருப்பி எடுப்பதால் பேரறிவாளனை விசாரணை செய்த அதிகாரிகளின் தற்போதைய வாக்குமூலம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால் கண்டிப்பாக பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார்.எனக் கூறியது.

அதே போல் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி நீண்டகாலமாக சிறையில் வாடுபவர்களை விடுவிப்பது வழக்கமான ஒரு நிகழ்வு. எழுவரின் விடுதலை கோரிக்கை உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக அண்ணா பிறந்த நாளில் யாரையும் விடுக்கவில்லை.

வரும் 24-ந் தேதி மாலை 5 மணிக்குள், வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீண்டும் அடைக்கப்படவுள்ளார். இதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top