காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராக விஜய்யின் ‘மெர்சல்’ டீசர் இன்று..

இதற்கு முன்பு நடித்த ‘பைரவா’ படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு மெர்சல் படத்தில் நடித்தார். இந்த படத்தை அட்லி இயக்கினார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி படம் வெளியானது.
மெர்சல் படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரராக நடித்து இருக்கிறார். மெர்சல் படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூன்று பேர் நடித்துள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து post ப்ரோடுச்டின் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படம் ரூ.130 கோடி செலவில் தயாராகி உள்ளது. விஜய் படங்களில் அதிக செலவில் உருவாகும் படம் இதுதான்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம்பெற்று உள்ளன. விஜய், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்து இருக்கிறார்.

தமிழகத்தில் நடந்த மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சியை ஆதரிப்பது போன்று இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் காளையுடன் இருப்பது போன்ற படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘மெர்சல்’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது. விஜய் ரசிகர்கள் மடடுமல்லாது அனைத்து தரப்பினருமே மெர்சல் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மெர்சல்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top