திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டு தோறும் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வை அறிவித்திருந்தார் திருமுருகன் ஆனால் போலீசார் அதற்கு தடை விதித்தனர். தடையை மீறி நினைவேந்தல் நடத்தியதற்காக. திருமுருகன் தமிழர் விடியல் கட்சியின் டைசன் உள்ளிட்டவர்களை பொய் வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பல்வேறு வாய்தாக்களுக்கு பிறகு இன்று இறுதி தீர்ப்பு வெளியானது. இவர்களின் விடுதலை தாமதப்படுத்தப்பட்டு கொண்டு இருந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று உயர்நிதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் 4 தோழர்கள் மீதான குண்டர் சட்டம் இரத்து செய்யப்படுவதாக நீதிபதி கலையரசன் அமர்வு தீர்ப்பளித்தது.

இதனால் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்யப்பட்டு விடுதலையடைகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top