கீழடியில் அகழாய்வில் 60 குடியிருப்பு தடயங்கள்; தொல்லியல் துறை அதிகாரி தகவல்

 

 

 

கீழடியில் 3-ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த அகழாய்வில்  60 குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

 

கீழடி அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுத்து, அப்பிரிவினைச் சார்ந்த கி அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை ஏற்று மிக சிறப்பாக நடத்தி கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த குறிப்பாக சங்ககால மக்கள் வாழ்ந்த, வசிப்பிடமாக இக்களம் கணிக்கப்பட்டது

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல், சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் அணிகலன்கள், யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி, இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், சுடுமண் பொம்மைகள் எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த சூழலில் திடீரென தொல்லியல் ஆய்வாளர் கி அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்,அவருக்கு பதிலாக ஸ்ரீராம் கீழடி ஆய்வுக்கு பணியமர்த்தப்பட்டார் .

அகழாய்வு பணி குறித்து தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 60 ஏக்கர் பரப்பில் குடியிருப்புகள் இருந்ததற்கு அடையாளங்கள் கிடைத்துள்ளன. ஆய்வு செய்துள்ளோம் இதுவரை 400 சதுரமீட்டர் பரப்பளவில் ஆய்வு செய்துள்ளோம். 3-ம் கட்ட ஆய்வு பணிகள் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடையுள்ளது. கீழடியில் ஆராய்ச்சியை தொடர அனுமதி கோரியுள்ளோம். பழங்கால பொருள்கள் கடந்த 6 மாதங்களில் 1800 பழங்கால பொருட்கள் ஆய்வு மூலம் கிடைத்துள்ளன. மேலும் அகழ்வாராட்சியில் 2200 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன. 90 சதவீதம் கண்ணாடியால் ஆனது அவற்றில் 1500-க்கும் மேற்பட்டவையாக மணிகளே உள்ளன. மொத்த மணிகளில் 90 விழுக்காடு கண்ணாடியில் செய்யப்பட்டவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூதுபவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும். இதுதவிர தந்தத்தில் செய்த சீப்பின் உடைந்த பகுதி, விளைய்ட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன.இன்று வரை 14 தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒளிய (ன்) என்ற முழுப்பெயரும் மற்றவை தனிநபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துக்களே காணப்படுகின்றன. மேலும் சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், 5 தங்கப் பொருள்கள், ஒரு சில மண்ணுருவங்களும் அகழாய்வில் இதுவரை கிடைத்துள்ளன. அகழாய்வு குறித்து 2 மாதத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஸ்ரீராம் தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top