வடகொரியா மீது ஐ.நா தடை, அமெரிக்கா பெரும் வலியை சந்திக்க நேரிடும் வடகொரியா எச்சரிக்கை

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது.

சுங்ஜிபேகாம் பகுதியில் கடந்த வாரம் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்திருந்தது.

இந்த சோதனைகள் அமெரிக்காவை மீண்டும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால், வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்க வடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.அமெரிக்காவின் இந்த தீர்மானம் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஒருமனதாக பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்.

இந்நிலையில், ஐ.நா.வின் தடைகளுக்கு பதிலளித்துள்ள வடகொரிய தூதர் ஹான் டே சாங், “சமீபத்தில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சட்டவிரோதமானது. இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெட்ரோலியப் பொருட்களுக்கு தடை மற்றும் கிம் ஜாங் உன் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இடம் பெற்ற அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறினால் அதற்காக அமெரிக்கா பெரும் வலியை சந்திக்க நேரிடும் என வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top