ஜப்பானிடம் கடன் பெற்று புல்லட் ரெயில் அமைக்கும் மோடி அரசு

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் வந்து இறங்குகிறார்.பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு ஜப்பான் பிரதமரை வரவேற்கிறார்கள்.

இன்று மாலை அகமதாபாத்தில் இந்தியா- ஜப்பான் நாட்டு கூட்டம் நடக்கிறது. இதில் இரு நாட்டு பிரதமர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை அகமதாபாத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் மும்பை- அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.

மும்பை- அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும் இந்த புல்லட் ரெயில் திட்டம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. 2022-23ம் ஆண்டில் திட்டம் முடிவடைந்து ரெயில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு ஜப்பான் அரசு ரூ.88 ஆயிரம் கோடி நிதியை 0.1 சதவீத வட்டியில் கடனாக அளிக்கிறது. இந்த நிதி 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படும்.

508 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் தண்டவாளத்திலும், 27 கி.மீ. தூரம் தரைவழி சுரங்கத்திலும், 7 கி.மீ. தூரம் கடல் வழி சுரங்கத்திலும், 13 கி.மீ. தரையிலும் புல்லட் ரெயில் ஓடும்.

முன்னதாக மோடி- அபே பேச்சுவார்த்தையின் போது 15 ஒப்பந்தங்களில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திடுகிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் குஜராத் மாநிலத்தில் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான திட்டங்கள் ஆகும்.

அப்போது இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாகவும் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாகவும் ஆலோசித்தோம்’ என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாசுவராஜ் ஆகியோரை பெலாரஸ் அதிபர் லுக்காஷேங்கோ சந்தித்து பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top