லல்லுபிரசாத் குடும்பத்தின் ரூ.165 கோடி சொத்து முடக்கம்

பீகார் முதல்-அமைச்சராகவும், மத்திய ரெயில்வே மந்திரியாகவும் பதவி வகித்த லல்லுபிரசாத் யாதவ் தனது பதவி மற்றும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சொத்துக்கள் குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தள்ளப்பட்ட அவர் எங்கெங்கு சொத்து வாங்கி குவித்துள்ளார் என்று வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தியது.

பல்வேறு விசாரணை குழுக்கள் நடத்திய ஆய்வில் லல்லுபிரசாத் யாதவ் முறைகேடாக ரூ.1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சொத்துக்களை அவர் தன் பெயரிலும், மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி, மகள் மிசா ஆகியோர் பெயர்களிலும் பதிவு செய்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் டெல்லி, பீகாரில் உள்ள 12-க்கும் மேற்பட்ட லல்லுவின் வீடுகளை வருமான வரித்துறையும், அமலாக்கத்துறை முடக்கியது.இந்த 21 வீடுகளின் மதிப்பு ரூ.256.75 கோடியாகும். இதில் சில ஷாப்பிங் மால்களும் உள்ளன.

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று லல்லுபிரசாத் யாதவ் குடும்பத்தினரின் ரூ.165 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக முடக்கம் செய்து அறிவித்தனர். லல்லுபிரசாத் மற்றும் அவர் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடைபெற உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top