வாட்ஸ்அப் புது அப்டேட்; ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்!

 

 

புதிய அப்டேட் மூலம் ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப் பல்வேறு புதிய வசதிகளையும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிறப்பான மற்றும் எளிய வழிமுறைகளையும் வழங்கி வருகிறது

 

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் இரண்டு அம்சங்களை சேர்த்துள்ளது. பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என்ற இரண்டு அம்சங்களும் ஏற்கனவே வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு இம்முறை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

அந்த வகையில் பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் அம்சம் வாடிக்கையாளர்கள் மல்டிடாஸ்கிங் செய்ய வழி செய்கிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர் வீடியோ கால் மேற்கொள்ளும் போது மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் செய்ய வழி செய்கிறது. வீடியோ கால் மேற்கொள்ளும் போது வீடியோ கால் திரையை சிறியதாக்கி, பின்னணியில் மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் செய்ய முடியும்.

இத்துடன் வீடியோ கால் திரையை போனில் எந்த பக்கமும் வைத்துக் கொள்ள முடியும். வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் PiP என அழைக்கப்படுகிறது. புதிய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அம்சம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை போன்றே டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் வாட்ஸ்அப்பில் 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடும், இதேபோல் புதிய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் மறைந்து விடும். டெக்ஸ்ட் மெசேஜை ஸ்டேட்டஸ் ஆக செட் செய்ய முதலில் ஸ்டேட்டஸ் ஆப்ஷனில் உள்ள பென்சில் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இதனை கிளிக் செய்ததும் வாட்ஸ்அப் டெக்ஸ்ட் டைப் செய்யக் கோரும்.

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வார்த்தைகளை டைப் செய்ததும், பின்னணியில் உள்ள நிறத்தையும் மாற்ற முடியும். போட்டோ மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் போன்று டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் ஆப்ஷனும் 24 மணி நேரத்தில் மறைந்து விடும் என்பதோடு, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்-இல் கமென்ட் செய்யும் போது, குறுந்தகவல் வடிவில் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.

வியாபார ரீதியாக பயன்தரும் அம்சங்களை வழங்குவது குறித்து வாட்ஸ்அப் பணியாற்றி வருவதை சமீபத்தில் உறுதி செய்துள்ளது. இந்த அம்சம் அனைத்து வகையான வியாபாரம் செய்வோருக்கும் ஏற்றதாக இருக்கும் என்றும் வியாபார ரீதியாக வாடிக்கையாளர்களை மிக எளிமையாக அணுக முடியும்.

தற்சமயம் தனிநபர் பயன்பாட்டிற்கான குறுந்தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், வியாபாரம் ரீதியிலான சேவைகளும் என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top