கத்தாருக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் அபுதாபியில் சிறை வைப்பு!

கத்தார் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் அபுதாபி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம், கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஜெரால்ட் ரீகன் (31), ஜான் பிரபாகரன் (40), ரீகன் ஜியோ கிளாட்வின் (35), கரோலின் ஜாகின் (26) மற்றும் மிடாலத்தைச் சேர்ந்த ஜோஸ் ஸ்டாலின் (32) ஆகிய 5 பேரும் கத்தார் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, கத்தார் நாட்டின் வக்ரா என்ற இடத்தில், அரேபியாவைச் சேர்ந்த ஜாபர் ஜீபைல் என்பவருக்கும் சொந்தமான சுஸ்வானி3238 என்ற விசை படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த மாதம் 25ம் தேதி ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த 5 பேரையும் அபுதாபி கடல் எல்லையை தாண்டியதாக கூறி அபுதாபி கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top