கேரள சுற்றுலா மந்திரி சீனாவுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

சீனாவில் வரும் 11-ம் தேதி உலக சுற்றுலா கழக நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா சபை நடத்தும் இந்த உலக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள சுற்றுலா மந்திரி சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து அவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.

இந்நிலையில், சீனா செல்வதற்கு சுரேந்திரன் அழைப்பு கடிதத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். ஆனால், அவருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து, இவ்விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை தேவை என பிரதமருக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து அம்சங்களையும் சரிபார்த்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top