“வா வா தமிழா” பாடல் நீட் தேர்வுக்கு எதிரான போரில் மற்றும் ஓர் ஆயுதம்

யூடில் -இல் பிரபலமாகி வரும் “வா வா தமிழா” ANTI NEET SONG. நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் “வா வா தமிழா” ANTI NEET SONG நீட்க்கு எதிராக பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பாடல் எளிய மனிதர்களின் கனவுகள், அதை நோக்கிய அவர்களின் பயணம் அதை இந்த அரசுகள் எப்படி சிதைக்கின்றன என்ற வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓட்டு அரசியலுக்காக காட்சிகள் எடுக்கும் தவறான முடிவுகள் மற்றும் இந்த அரசு மக்கள் மீது காட்டும் பாகுபாடு, போன்றவற்றை சாட்டைக்கொண்டு அடித்து கேள்வி எழுப்பும் விதமாக இந்த பாடலை உருவாக்கியுள்ளார்.

சமீபகாலமாக அரசுகள் செய்யும் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து மாணவர்கள், மக்கள், இயக்கங்கள் மட்டும் சில கட்சிகள் போராடி வரும் நிலையில், மக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதி அவர்களின் துயரம் அதை எதிர்த்து போராடும் அவர்களின் தண்மை குறித்து கலை துறையில் அவர்களை பிரதிபளிக்கும் எந்த ஒரு செயலும் இல்லாத இருந்த வந்த நிலையில் “வா வா தமிழா” -ANTI NEET SONG மக்களுக்கான ஒரு பாடலாக அமைந்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது. இம்மாதிரியான கலைஞர்களே

“வா வா தமிழா” பாடல் அரசின் நீட்கக்கு எதிராக மக்கள் குரலாக எழுந்து நிற்கிறது. மக்களுக்கான கலை படைப்பாக உருவாகியுள்ள இந்த பாடல் இன்னும் பல கலைஞர்களுக்கு தூண்டுதலாக மட்டும் அமையாமல் பல புதிய கலைஞர்களை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top