உலகளவிலான பெண்கள் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

கிரீஸில் ஜூனியர் உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சோனம் தங்கம் வென்றார். 56 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனை செனா நகாமோட்டோ உடன் சோனம் பலப்பரீட்சை நடத்தினார். இந்தப் போட்டியில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி, சோனம் வெற்றி பெற்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான நீலம், 43 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் 60 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் அனுஷு ஜப்பான் வீராங்கனை நயோமி ரூக்கியை இன்று எதிர்கொள்கிறார். இந்தியா வீராங்கனை அனுஷு இந்த போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top