மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; ரிக்டர் 8.1 ;சுனாமி எச்சரிக்கை

 

 

மெக்சிகோ  தென் கடற்கரை சியபஸ் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர்.

 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், வானுயர்ந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

 

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், “மெக்சிகோவின் தென் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கவுத்தமாலாவில்,  ரிக்டர் அளவுகோலில் 8.1 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  இந்த நிலநடுக்கம் தென்மேற்கே உள்ள பிஜி ,ஜப்பான் நகரிலிருந்து 123 கிலோமீட்டர் தொலைவில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

பசுபிக் சுனாமி  எச்சரிக்கை மையம், ”சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 3 அடி உயரத்துக்கு கடலில் அலைகள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளது.

 

 

நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் மூன்று மணி நேரங்களில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோ கடற்கரை, கவுதமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா ஹோண்டரஸ் மற்றும் ஈகுவடார் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவில் ஏற்பட்ட சுனாமி அலைகள் காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

1985 ஆம் ஆண்டுக்கு பிறகு மெக்ஸிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top